விக்ரமுடன் பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்.!
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்திற்கு பின்னர் இறைவி, ஜிகர்தண்டா உள்ளிட்ட வித்தியாசமான படங்களை கொடுத்தார்.;
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்திற்கு பின்னர் இறைவி, ஜிகர்தண்டா உள்ளிட்ட வித்தியாசமான படங்களை கொடுத்தார்.
இதன் பின்னர் நடிகர் ரஜினியின் பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
இதனிடையே, கார்த்திக் சுப்புராஜ், தற்போது நடிகர் விக்ரமை வைத்து சியான் 60 என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தில் விக்ரம் துரும் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்து வரும் நிலையில், படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் கார்த்தி சுப்புராஜ். இந்த படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.