மாரடைப்பால் பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்.!

நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Update: 2021-04-30 03:44 GMT

தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் 54, மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராகவும், பின்னர் சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக இருந்தவர். நேருக்கு நேர், முதல்வன், சிவாஜி, உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர், 'கனா கண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதன் பின்னர் கோ, அயன், மாற்றான், கவண், அநேகன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி வந்தார் எனுபது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News