அல்லு அர்ஜுன் படம் குறித்து லிங்குசாமி கூறியது என்ன?

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படம் கைவிடப்படவில்லை என இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.

Update: 2022-07-15 05:59 GMT

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படம் கைவிடப்படவில்லை என இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.




 

தமிழில் ஆனந்தம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி பையா, சண்டக்கோழி என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழியிலும் 'தி வாரியார்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இது நேற்று வெளியாகியுள்ளது.




இந்நிலையில் வாரியார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லிங்கசாமியிடம் 'அல்லு அர்ஜுன் படம் துவங்க பூஜை செய்யப்பட்டு இன்னும் துவங்கப்படவில்லை' ஏன் என கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறியதாவது, 'அல்லு அர்ஜுன் படம் கைவிடப்படவில்லை, அதே சமயம் அந்த படத்திற்கான சிறப்பான கதை என்ன முடிவாகவில்லை அதனால் தான் அந்த படம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. நிச்சயம் அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவேன் என கூறியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

Similar News