இளையராஜா மீது வருத்தத்தில் சீனு ராமசாமி - ஏன்?

'இளையராஜா ஏன் என்னை அழைக்கவில்லை' என இயக்குனர் சீனு ராமசாமி வருத்தப்பட்டுள்ளார்.

Update: 2022-06-21 10:49 GMT

'இளையராஜா ஏன் என்னை அழைக்கவில்லை' என இயக்குனர் சீனு ராமசாமி வருத்தப்பட்டுள்ளார்.





சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'மாமனிதன்' படத்தின் வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 'மாமனிதன் படத்தை சிறந்த கதைக்களத்தில் எடுக்கவேண்டும் என நினைத்து பண்ணைபுரத்தில் மாற்றினேன், இளையராஜா சார் வீடு இருக்கும் தெருவில் தான் கேமராவிற்கு முதல் ஷாட் எடுத்தேன். 37 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்தேன் .அதன் பிறகுதான் பாடல் உருவாக்கப்பட்டது இந்த படத்தின் பாடல் உருவாக்கம் ரெக்கார்டிங் இரண்டுமே கலந்து கொள்ள நான் அழைக்கப்படவில்லை, என்ன காரணம் என தெரியவில்லை நான் என்ன தப்பு செய்தேன்? இது என்ன நியாயம்? என இளையராஜா அழைக்காதது குறித்து சீனு ராமசாமி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Similar News