"தி.மு.க எங்கள் தலைவிக்கு கொடுத்த தொல்லைகள் படத்தில் சொல்லப்படவே இல்லை ! " - தலைவி படம் குறித்து ஜெயக்குமார் !

Breaking News.

Update: 2021-09-11 08:15 GMT

"தி.மு.க எங்களுக்கும் எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகளை படத்தில் சொல்லப்படவே இல்லை" என தலைவி படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தலைவி படம் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா'வின் வாழ்க்க வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் கங்கணா ராவந்த் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். படம் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் துணிவுடன் சாதித்துக் காட்டுகிறார் என்பதை தலைவி படம் காட்டுகிறது. அது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் படத்தின் ஒரு இடத்தில் எம்.ஜி.ஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல காட்சி வருகிறது. எம்.ஜி.ஆர் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது.

நடக்காத சம்பவங்களைப் படத்தில் வைத்திருக்கக் கூடாது. இதைப் பார்ப்பவர்கள் மனதில் வெவ்வேறு எண்ணங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. தி.மு.க எங்களுக்கும் எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகளை படத்தில் சொல்லப்படவே இல்லை. வரலாறு என்று வரும்போது அதையும் சொல்லியிருக்க வேண்டும். அதைப் படத்தில் சொல்லப்படவில்லை. இவையெல்லாம் சொல்ல மறந்த கதைகள்" என குறிப்பிட்டார்.

Twitter

Tags:    

Similar News