#BiggBoss4 திடீரென பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

#BiggBoss4 திடீரென பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

Update: 2021-01-13 17:25 GMT
பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 போட்டியாளர் உள்ள நிலையில் திடீரென ஒரு போட்டியாளர் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்  தெரியவந்துள்ளது. எனவே ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார்.  கடந்த சீசனில் கூட ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு கவின் போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த சீசனிலும் அப்படி ஒரு வாய்ப்பு ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சீசனில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேபி மற்றும் ரம்யா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை அறிவித்து அந்த தொகையை பெற்றுக் கொண்டு வெளியேற விருப்பமுள்ளவர்கள் வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவிக்க இருப்பதாகவும் ரம்யா அந்த தொகையை பெற்றுக்கொண்டு வெளியேற முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

கடந்த இரண்டு வாரங்களாகவே பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தான் என்பது ரம்யாவுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. எனவே அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, கிடைக்கும் பணத்தை பெற்று கொண்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Similar News