வெற்றிமாறன் - இளையராஜா இணையும் முதல் படம் எது தெரியுமா.!

வெற்றிமாறன் - இளையராஜா இணையும் முதல் படம் எது தெரியுமா.!;

Update: 2020-12-05 19:34 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கலக்கி வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடச்சென்னை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல், சூரி நடிக்கும் படம் என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சூரி நடிக்கும் வெற்றிமாறன் படத்திற்காக சூரி வேற லெவலில் தனது உடலை மாற்றியுள்ளார்.  அந்த புகைப்படங்க்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு நியூஸ் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் சூரி படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறாராம்.வெற்றிமாறன் - இளையராஜா - பாரதிராஜா கூட்டணியில் ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த சுவாரஸ்ய காம்பினேஷன் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இது பற்றிய முழுமையான தகவல் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar News