தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?;

Update: 2020-12-29 17:35 GMT

தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம்  பாஸ்டர் இந்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு  இன்று வெளியானது. அதில் இப்படத்தின் ரிலீஸ் தேதி  ஜனவரி 13ஆம் தேதி  தியேட்டரில் வெளியாகும் என்றுஅதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்தது என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்தனர்.

தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த படம் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்திற்குள் அனைத்து படங்களும் முடிவடையும் நிலையில் 3 மணி நேரம் என்பது கொஞ்சம் நீளம் அதிகமாக இருக்கின்றதே என்று சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும் விஜய், விஜய்சேதுபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து விறுவிறுப்பான படத்தை கொடுத்திருப்பார்கள் என்றும், அதனால் 3 மணி நேரம் என்பது படத்திற்கு குறையாக இருக்காது என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

Similar News