#BigBoss4 பைனலுக்கு முன் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா?

#BigBoss4 பைனலுக்கு முன் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா?;

Update: 2021-01-17 17:44 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெற்றியாளர் யார் என்று  அறிவிக்கப்படும் நிலையில் ஃபினாலே டாஸ்க் இன்று மாலை 6 மணி நேரம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வு பெற்றிருக்கும் நிலையில் இந்த ஐவரில் டைட்டில் வின்னர் பட்டம் யாருக்கு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் ஃபினாலே செல்லும் முன் இருவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அவர்களில் ஒருவர் சோம் என்றும் இன்னொருவர் ரம்யா என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான வாக்குகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ரம்யா, சோம் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்கள் மூலம் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி ஆரிக்கு தான் மிக அதிக சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவர்தான் டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி ரன்னர் என்றும், மூன்றாவது இடம் ரியோவுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


முன்னதாக இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 4 கோப்பையை பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகின் வெளியிடுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமன்றி முகின்  நடித்துக்கொண்டிருக்கும் 'வெற்றி' என்ற திரைப்படம் குறித்தும் கமலஹாசனுடன் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளும் இன்று ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.இது பற்றிய  முழுமையான  தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

Similar News