செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் ஒரு செஸ் போர்டு விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ் இத்தனை ஆயிரமா?

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் போர்டுகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன.

Update: 2022-07-29 13:27 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் போர்டுகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன. மொத்தம் 708 டிஜிட்டல் போர்டுகள் தயார் நிலையில் இரு அரங்கிலும் மேஜையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு போர்டின் விலை ரூபாய் 75 ஆயிரம் ஆகும்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் ஆடுவார்கள், 4- ஆட்டத்திற்கு ஒரு நடுவர் இருப்பார். போட்டி நடுவர், துணை தலைமை நடுவர் என்று மொத்தம் 210 நடுவர்கள் ஒரே நேரத்தில் அரங்கில் வலம் வருவார்கள். ஒரு சுற்று 5 மணி நேரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஒவ்வொரு செஸ் போர்டு 'சென்சார்' உதவியுடன் இயங்கும். வீரர்கள் காய் நகர்த்தியது அது லேப்டாப்புகளில் பதிவாகும். அதிலிருந்து இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பு வழங்கப்படும்.

அரங்கில் நுழையும் இடத்தில் மொத்தம் 70 மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .வீரர்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் பகுதியில் உள்ள 21 நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு அந்த நாட்டுக்கு தகுந்த மாதிரி விதவிதமான உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Source - Daily Thanthi

Similar News