மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படம் என்ன தெரியுமா?

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படம் என்ன தெரியுமா?;

Update: 2021-02-13 18:56 GMT

கடந்த பொங்கல் விருந்தாக  மாஸ்டர் திரைப்படம்  தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,சேவியர் பிரிட்டோ  தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.


 

இப்படத்தின் டைட்டில் 'அழகிய கண்ணே' என்று வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை நடந்த நிலையில் படப்பிடிப்பு வரும் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகிய கண்ணே படத்தின் கதாநாயகன் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் மற்றும் கதாநாயகி  சஞ்சிதா ஷெட்டி மேலும் ராமநாதன் இசையில் வைரமுத்து பாடல்களில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று  நடைபெற்ற படத்தின் பூஜையில்  படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News