பூஜா ஹெக்டேவின் லட்சிய கதாபாத்திரம் எது தெரியுமா?

பூஜா ஹெக்டே தான் நடிக்க உள்ள லட்சிய கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார்.

Update: 2023-04-19 09:45 GMT

தமிழில் முகமூடி, பீஸ்ட் படங்களில் நடித்து பிரபலமான பூஜாஹெக்டே இந்தி தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பூஜாஹெக்டே அளித்துள்ள பேட்டியில்," எனது வெற்றி என்பது ஒரே இரவில் சுலபமாக நடந்துவிடவில்லை . தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த எனக்கு மொழி தெரியாது என்பதால் கஷ்டமாக இருந்தது வசனங்களை உதவி இயக்குனர்களை பேசவைத்து பயிற்சி எடுத்தேன்.


சினிமாவில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன் .படங்கள் சரியாக ஓடாத நிலை இருந்தது. ஒரு வருடம் எந்த பட வாய்ப்பு வராமல் சும்மா இருந்தேன். எனக்கு ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு வரவில்லை . பிறகு திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்து பிசியாக நடிக்க தொடங்கினேன். இப்போது நான் வெற்றி பெற்ற நிலையில் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்கிறேன்.


சினிமா வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு முன்னேறி இருக்கிறேன். எனக்கு நிறைய லட்சிய கதாபாத்திரங்கள் உள்ளன .குறிப்பாக பெண்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார்.




Similar News