சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா.!
சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா.!;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் மக்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். அந்த வகையில் பல படங்களில் நடித்து வரும் நிலையில் "அண்ணாத்த" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40% இருப்பதாகவும் அவற்றை விரைவில் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறினார்.ஆனால் இவர் சமீபத்தில் அவரது அரசியல் வருகையை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது 'அண்ணாத்த' படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி டிசம்பர் 15 முதல் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தெரிகிறது. இதற்காக செட் அமைக்கும் பணி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுவதாகவும் டிசம்பர் 15 முதல் தொடங்கும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்க உள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.