விக்ரம் பிரபு - லக்ஷ்மி மேனன் மீண்டும் இணையும் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.!
விக்ரம் பிரபு - லக்ஷ்மி மேனன் மீண்டும் இணையும் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு.கும்கி என்ற படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுக கதாநாயகியாக நடிகை லட்சுமி மேனன் நடித்து இருப்பார்.
முன்னணி இயக்குனரான முத்தையா கொம்பன், குட்டி புலி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர்.தற்போது விக்ரம் பிரபு முத்தைய்யா இயக்கத்தில் 'பேச்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் படத்தின் டைட்டிலை "புலிக்குத்தி பாண்டியன்" என மாற்றியுள்ளது படக்குழு. லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நேரடியாக பொங்கலுக்கு ஜனவரி 14 சன் டிவியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளியன்று சுந்தர்.சி தயாரிப்பில் பத்ரி இயக்கிய 'நாங்க ரொம்ப பிசி' என்ற திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.