சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' பட ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?
சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' பட ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அவர் நடித்து வரும் படம் 'அண்ணாத்த' கொரோனா காரணமாக 7-மாதங்கள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பின் போது திடீரென 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின் குணமாகி வீடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் முடிவடைந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது
எனவே இந்த ஆண்டு இறுதியில் தான் அண்ணாத்த திரைப்படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.