பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா..?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா..?;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்ட நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் இறுதிகட்டத்தை அடைந்து வருகிறது என்பதும் இந்த வாரத்துடன் எவிக்சன் பிராசஸ் முடிவடைகிறது என்பதும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு பேர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அவ்வாறு இருவர் எவிக்சன் செய்யப்பட்டால் நமது தரப்பில் சமூக வலைதளங்களில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி ஆரிக்கு தான் அதிகபட்ச வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது ஆரி 4 லட்சத்து 72 ஆயிரத்து 285 வாக்குகளை பெற்று பெற்றுள்ளார்.ஆரியை அடுத்து பாலாஜி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். ரியோ மற்றும் கேபி ஆகிய இருவரும் மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளனர்.
எனவே இந்த கருத்துக்கணிப்பின்படி இந்த வாரம் டபுள் எவிக்சன் இருந்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய இருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் ரம்யா வெற்றி பெற்றால் ஷிவானி மற்றும் சோம் வெளியேற்றப்படுவார்கள். மேலும் ஒருவர் எவிக்சன் செய்யப்பட்டால் ஷிவானி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய தகவலை சனிக்கிழமை நிகழ்ச்சியில் பார்ப்போம்.