துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் ஏன் தெரியுமா..? ஏர்போர்ட் புகைப்படம் வைரல்..!

துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் ஏன் தெரியுமா..? ஏர்போர்ட் புகைப்படம் வைரல்..!;

Update: 2021-02-16 19:16 GMT

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்கார் வாரி பட்டா மற்றும் நானியுடன் ராங்டே திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ராங்டே என்ற திரைப்படத்திற்காக துபாய் சென்ற கீர்த்தி சமீபத்தில் தான் இந்தியா திரும்பினார். தற்போது மீண்டும் மகேஷ்பாபுவின் திரைப்படத்திற்காக அவர் துபாய் செல்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

  மகேஷ்பாபு நடிப்பில் துபாயில் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷும் கலந்து கொள்ள உள்ளார். தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டு சங்கராந்தி அன்று வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News