தெலுங்கு இயக்குனர் என்று ஒதுக்காதீர்கள் - விசும்பும் வம்சி பைடிப்பள்ளி
கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருந்தார் மற்றும் தமன் இப்படத்திற்கு இசையமைத்தார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, பிரபு, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
தில்ராஜு தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைட்டிப் பள்ளி இயக்கி இருந்தார். மேலும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 250 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் ஐந்து நாளில் ரூபாய் 150 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை நட்சத்திர ஹோட்டல் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினார்கள். இவ்விழாவில் விஜய் ரஷ்மிக்கு மந்தனா தவிர மற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் படத்தின் இயக்குனர் வம்சி கலந்துகொண்டு படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம் அந்த நம்பிக்கையை நிஜமாக்கி தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யிடம் இந்த கதை சொல்லும்போது, நீங்கள் என் மீது வைத்து நம்பிக்கையை காப்பாற்றுவேன் என சொன்னேன்.
தெலுங்கு இயக்குனர் என்று என்னை பலரும் கூறுவது மிகவும் காயப்படுத்துகிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை முதலில் நான் ஒரு மனிதன், பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னை சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்கும் முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடம் அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி இது பக்கா தமிழ் படம் என்பதே தான் நான் முதலில் இருந்து கூறி வருகிறேன். என் தந்தை படம் பார்த்து கண்ணீர் விட்டார் அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம் என்று கூறியுள்ளார்.