தினமும் குடித்துவிட்டு ரகளை.. நடிகர் விஷ்ணு மீது போலீசில் புகார்.!
தினமும் குடித்துவிட்டு ரகளை.. நடிகர் விஷ்ணு மீது போலீசில் புகார்.!;
சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் மீது பொதுமக்கள் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அப்படி தங்கிய விஷால் தினமும் இரவு நேரங்களில் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளை நிம்மதியாக இருக்க விடுவதில்லையாம். நள்ளிரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, தனது வீட்டில் சத்தம் அதிகமாக வைத்து பாட்டு கேட்பாராம். இதனால் அருகாமையில் வசித்து வரும் மக்களுக்கு தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். இரவு நேரங்களில் வயதானவர்கள், குழந்தைகள் சிரமப்படுவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் அதிகளவு சத்தம் வருகிறது. இது தொடர்பாக கேட்டால் அவர் தகாத வார்த்தைகளில் குடியிருப்பு வாசிகளை திட்டி வருகின்றார். மேலும், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்களை அழைத்து வந்து கும்மாளம் போட்டு வருகிறார். இதனால் எங்களின் நிம்மதி கெட்டுவிட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து விஷ்ணு விஷாலிடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு நடிகர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இப்படி பொதுமக்களை தொந்தரவு செய்து வருவது மிகவும் கண்டிக்தக்கது. இவரை போன்ற நடிகர்கள் நாட்டிற்கு ஒரு கேடு என்றே கூறலாம்.