அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்.!

அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்.!;

Update: 2020-12-18 16:08 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.பல படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்றவர்.இந்த நிலையில் அவெஞ்சர் இயக்குனரின் அடுத்த படத்தில் தமிழ் ஹீரோ நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர் இயக்க இருக்கும் 'தி க்ரே மேன்' என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ்காக உருவாக்கப்பட உள்ளது என்றும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் 4 நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4-ல் ஒருவர் பிரபல தமிழ் ஹீரோ தனுஷ்.

இந்நிலையில் தனுஷ், கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகிய 4-வரும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாலிவுட்டில் The Extraordinary Journey of the Fakir என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளது தமிழ் திரை உலகிற்கு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. 


இதனை அடுத்து தனுஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.மேலும் ஹாலிவுட்டில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பதும் அந்த படங்கள் வசூலித்த வசூல் தொகையானது உலகம் முழுவதும் ஆச்சரியப்பட வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


 

Similar News