வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குழந்தைகளை தத்தெடுத்த பிரபல நடிகர்!
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குழந்தைகளை தத்தெடுத்த பிரபல நடிகர்!;
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல உதவிகள் செய்தவர் சோனு சூட். இவர் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும் தற்பொழுது மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். அந்த வகையில் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.அப்போது அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பியது மட்டுமன்றி அவர்களுக்கு வைப்புநிதி, இன்சூரன்ஸ், வேலை வாய்ப்பு உள்பட பல வசதிகளையும் செய்து கொடுத்தார். வெளி நாடுகளில் தவித்த மாணவ, மாணவிகளை சொந்த ஊருக்கு அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்தார்.இதேபோல அவர் செய்த உதவிகள் சொல்லி அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவருடைய சமூக சேவை தற்போது மேலும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீசியன் ஆலம்சிங் என்பவரின் 4 பெண் குழந்தைகளையும் நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். அந்த நான்கு பெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் இப்பதிவை வைரலாகி வருகின்றனர்.