சிம்புவை அடுத்து சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய பிரபல நடிகர்..!
சிம்புவை அடுத்து சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய பிரபல நடிகர்..!;
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் பல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அவர்களது உடல் அமைப்பினை மாற்றி சிக்ஸ்பேக் வைத்துக் கொள்வது ட்ரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே சிம்பு, தனுஷ், விஷால், பரத், ஆர்யா உள்பட பல நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பில் ஒருசில படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் ஐந்து படங்களில் கமிட்டாகி உள்ளார் எனவும், கடந்த வருடமும் இந்த வருடமும் படங்களில் நடிக்காவிட்டாலும் தற்போது ஆரண்யா, மோகன்தாஸ்,ஜெகஜாலக்கில்லாடி, எப்.ஐ.ஆர்,காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.எனவே விஷ்ணு விஷால், இவர் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் கண்ணாடி முன் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.அனேகமாக அவரது அடுத்த படத்திற்காக விஷ்ணுவிஷால் சிக்ஸ்பேக் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.