சைக்கிளிங்கில் 400 கிலோமீட்டர் கலக்கிய பிரபல நடிகர்! பாராட்டிய விவேக்!
சைக்கிளிங்கில் 400 கிலோமீட்டர் கலக்கிய பிரபல நடிகர்! பாராட்டிய விவேக்!;
தமிழில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யா. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கி விட்டனர். அந்த வகையில் ஆரி சைக்கிளிங்கில் 400 கிலோமீட்டர் சென்றிருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.இதையறிந்து ரசிகர்களும் ஆர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்டா படத்தை முடித்து விட்டு அடுத்தப் படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ஆர்யா கொரோனா காலத்தில் முழுநேரமும் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங்கில் ஈடுபட்டு வந்தார்.
சென்னை கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த அவர் முதற்கட்டமாக 100 கி.மீ சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரஸ் ஆனது. தற்போது 400கி.மீ சேலஞ்சை அவர் வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். இதனால் சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட பலரும் நடிகர் ஆர்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது சாதனையை அறிந்த காமெடி நடிகர் விவேக் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியது: டியர் ஆர்யா உங்களுடைய 400 கி.மீ சைக்கிளிங் பயணத்திற்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக நீங்கள் இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய பயணம் மிகப்பெரிய உந்துதலாக அமையும் என்று புகழ்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளித்த ஆர்யா என்றென்றும் மாறாத உங்களது அன்புக்கு நன்றி சார். உங்களுடைய ஊக்கம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Thank u so much for ur everlasting love and inspiration sir 🤗🤗😘😘😘 You are awesome 😍 https://t.co/o0x5bgZf1q
— Arya (@arya_offl) January 23, 2021