படகில் உடற்பயிற்சி செய்யும் பிரபல நடிகை:வைரல் வீடியோ..!

படகில் உடற்பயிற்சி செய்யும் பிரபல நடிகை:வைரல் வீடியோ..!

Update: 2021-02-07 18:15 GMT

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா,ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி இந்த படங்களின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வரும் நிலையில் தற்போது விஷால் நடிக்கும் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதன்பின் பல படங்களில் நடித்து அப்படங்கள் வெற்றி படங்களாகவும் அமைந்த நிலையில் சில விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர் பல புகைப்படங்களையும்,  வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்தவகையில் அவர் படகில் நின்று கொண்டு ரிஸ்கான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரசிகர்கள் அவர்களது லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் விரைவில் வைல்ட் வாரியர் ரேஸ் போட்டிக்காக தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Full View

Similar News