மணமகன் தேடும் பிரபல நடிகை - வைரலாகும் ட்வீட்!

மணமகன் தேடும் பிரபல நடிகை - வைரலாகும் ட்வீட்!

Update: 2020-12-22 18:54 GMT

தமிழில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை பிரியா பவானிசங்கர். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த 'மேயாதமான்' படத்தில் அறிமுகமாகி மாபியா, கடைக்குட்டி சிங்கம் உள்பட ஒருசில படங்களில் நடித்த ப்ரியா பவானிசங்கர், தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வந்ததாகவும், அதன்பின்னர் திடீரென இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் மோதுவது போன்ற ஒரு போஸ்டையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமின்றி நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவு செய்ததால் இருவருக்கும் காதல் என வதந்தி கிளம்பியது. ஆனால் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் புரமோஷன் தான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

சற்றுமுன் ப்ரியா அவரது  சமூக வலைத்தளத்தில் பிரபல போட்டோகிராபர் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவு செய்து, "தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்" என்று பதிவு செய்துள்ளார். ப்ரியாவின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது எந்த படத்தின் புரமோஷனுக்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 


 

Similar News