விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் பிரபல இயக்குனர் - யார் தெரியுமா.?

விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் பிரபல இயக்குனர் - யார் தெரியுமா.?

Update: 2020-12-06 16:17 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.தன்னுடைய எதார்த்த நடிப்பினாலும், சாதாரண பேச்சின் திறமையாலும்,  மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்தவகையில் இவரை எங்க வீட்டுப் பிள்ளை என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவரின் கைவசம் உள்ள படங்கள் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. 

தற்போது உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் பிரபல இயக்குநரான மகிழ் திருமேணி நடிக்கவுள்ளாராம். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் இப்படத்தில் தனுஷ் பட கதாநாயகி மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை பற்றிய முழுமையான தகவல்கள் சில நாட்களில் வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.


 

Similar News