பாடகர் கே.கே மறைவு - முக்கிய தலைவர்கள் இரங்கல்

பிரபல பாடகர் கே.கே காலமானார், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-06-01 13:58 GMT

பிரபல பாடகர் கே.கே காலமானார், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




மேற்கு வங்கத்தில் கல்லூரி விழாவில் பாடிக் கொண்டிருந்த போது பிரபல பாடகர் கே.கே காலமானார். இவரது பெயர் கிருஷ்ணகுமார் குன்னாத் டில்லியைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.



தமிழில் இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. காதல் தேசம் திரைப்படத்தில் வரும் 'ஹல்லோ டாக்டர்', 'கல்லூரி சாலை', மின்சாரக்கனவு திரைப்படத்தில் வரும் 'ஸ்டிராபெரி கண்ணே', உயிரோடு உயிராக திரைப்படத்தில் வரும் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது', 7 ஜி ரெயின்போ காலனி 'நினைத்து நினைத்து' பார்த்தேன், என பல பாடல்களை பாடியவர். மேடை நிகழ்ச்சியில் மறைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News