ரசிகரின் அதிரடி கேள்வி: cool-ஆக பதிலளித்த ஆரி!
ரசிகரின் அதிரடி கேள்வி: cool-ஆக பதிலளித்த ஆரி!;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை நாள் வரை தவறு செய்து விட்டு தப்பி தப்பி விட முடியாது என்றும் போட்டியாளர்கள் எந்தத் தவறு செய்தாலும் அதை சரியாக ஞாபகம் வைத்து சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாக சொல்லி அந்த தவறை வெளிப்படுத்துவார் என்றும் ஆரியின் மேல் ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. மேலும் சக போட்டியாளர்களின் தவறை கண்டுபிடித்து அதனை வெளிப்படுத்தி தன்னை நல்லவராக காட்டி கொள்வதிலும் ஆரி மீது விமர்சனங்கள் எழுவது உண்டு.
இந்த நிலையில் இன்று காலர் ஒருவர் ஆரியிடம் இதுகுறித்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். 'அந்நியன்' படத்தில் வரும் அம்பி என்கிற நல்ல கேரக்டரை யாருக்கும் பிடிக்காது. ஏனெனில் அவர் எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். பிக்பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் சராசரி மனிதர்களாக உலா வரும்போது நீங்கள் மட்டுமே அம்பி போல் செயல் படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.இந்த காலரின் அதிரடி கேள்விக்கு பதில் கூறிய ஆரி, பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருப்பதற்காக வரவில்லை.
பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே வந்த அன்றே இங்கு யாரும் நண்பர்களும் இல்லை யாரும் எதிரிகளும் கிடையாது என்று பிக்பாஸ் கூறினார். எல்லோர்கிட்டையும் நான் கேள்வி கேட்பது அவர்கள் மேல் குற்றம்சாட்ட அல்ல, அவர்களை இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ளவே அந்த கேள்வியாக நான் பார்க்கிறேன் என்று ஆரி கூறினார். இந்த வாரம் காலரின் அதிரடி கேள்வியும் அதற்கு ஆரி கொடுத்த சரியான பதில் குறித்தும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றிய முழுமையான விவரங்களை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.