சூப்பர் ஸ்டாரின் 170-வது படம் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 107 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.
ரஜினிகாந்த் ஏற்கனவே ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன .இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள் .
படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்னும் சில தினங்களில் ரஜினி சம்மந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் தனது 170- வது படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை எடுத்த பிரபலமான டி.ஜே ஞானவேல் டைரக்ட் செய்கிறார் . படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.