சத்யராஜ் நடிக்கும் சூப்பர் மேன் கதை எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சூப்பர் மேன் கதையை தேர்ந்தெடுத்து சத்யராஜ் புதிதாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Update: 2023-08-19 06:00 GMT

சத்யராஜ், வசந்த ரவி, ராஜீவ் மேனன் தான்யா ஹோப் நடித்துள்ள படம் வெப்பன்ஸ். இந்த படத்தை குகன் சென்னியப்பன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும் போது, ஆக்சன் திரில்லர் படமாக தயாராகிறது. சஸ்பென்சும் இருக்கும். யாராலும் அழிக்க முடியாத சூப்பர் மேன் சக்தி கொண்ட மனித ஆயுதமாக சத்யராஜ் வருகிறார். சத்யராஜுக்கு சூப்பர் பவர் எப்படி கிடைத்தது என்பதை விளக்க பிளாஷ்பேக்கில் காட்சி ஒன்றை வைத்துள்ளோம்.


இந்த காட்சியில் 'ஏ.ஐ' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சத்யராஜ் இளமையான தோற்றத்தில் உருவாக்கினோம் .இந்திய திரையுலகில் 'ஏ.ஐ' தொழில்நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப்படத்தில்தான் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராபிக் காட்சிகள் இந்த படத்தில் தான் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.


நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப சூப்பர் மேனாக சத்தியராஜ் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன். எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத மனித ஆயுதம் அவர் அப்படி மாறியது எப்படி ? என்ற ரீதியில் கதை பயணிக்கும். யூடியூபர் வேடத்தில் ஒரு இடத்தில் வசந்த் ரவி வருகிறார். இசை ஜிப்ரான் .ஒளிப்பதிவு பிரபு 

Similar News