தளபதி விஜய்க்கு சிலை வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள்!

தளபதி விஜய்க்கு சிலை வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள்!

Update: 2021-01-17 18:28 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியானது.பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்து உள்ளது.

இன்னும் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக வெளியான அனைத்து திரையரங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் தற்போது குடும்ப ஆடியன்ஸ்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கம் சென்று 'மாஸ்டர்' படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் மாஸ்டர் படத்தை பார்த்து ரசித்த கர்நாடக மாநில ரசிகர்கள் "விஜய்க்கு சிலை" வைத்து கொண்டாடிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்க்கு சிலை வைத்து அதற்கு மாலை போட்டு கர்நாடக மாநில ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு சிலை வைக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பாக அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Similar News