காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிப் போன ரசிகர்கள்..!

காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிப் போன ரசிகர்கள்..!;

Update: 2021-02-06 17:48 GMT

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் இருவரும் மாலத்தீவு சென்று மாலத்தீவின் அழகினைப் புகைப்படமாக எடுத்து காஜல் அகர்வால் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.


 

இந்தநிலையில் காஜல்அகர்வால் வெளியிட்ட  புகைப்படத்தால்  ரசிகர்கள் குழப்பத்திற்கு  ஆளாகியுள்ளனர்.அந்த புகைப்படத்தின் இருபக்கமும் காஜல் அகர்வால் இருப்பதுதான் குழப்பத்திற்கு காரணம். சிங்கப்பூரில் இருக்கும் 'மேடம் டுசாட்ஸ்' என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் யார் நிஜமான காஜல்அகர்வால் என்று  பதிவிட்டு வருகின்றனர். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரல் ஆகிவருகிறது.

Similar News