பிப். 28ம் தேதி தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் ‘ஏலே’.. அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிப். 28ம் தேதி தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் ‘ஏலே’.. அதிகாரபூர்வ அறிவிப்பு.!;
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாக இருந்த ‘ஏலேய்’ திரைப்படம், தற்போது தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்படுவதாக அப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ‘சில்லுக் கருப்பட்டி’ என்ற படத்தை இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு விருதுகளும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஹலிதா ஷமீம் தற்போது ‘ஏலேய்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் இப்படம் திரையரங்கில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடித்துள்ளார். நாளை திரையங்கில் வெளியாக இருந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 28ம் தனியார் தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவித்துள்ளது. எந்த தொலைக்காட்சி என்று இன்னும் குறிப்பிடவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.