நடிகர் சங்கம் அலுவலகத்தில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் நாசம்.. இதன் பின்னணியில் யார்.?
நடிகர் சங்கம் அலுவலகத்தில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் நாசம்.. இதன் பின்னணியில் யார்.?
சென்னை தியாகராய நகரில் இருக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், இன்று காலை 6 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இது பற்றி அந்த கட்டிடத்தில் உள்ள காவலாளி தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பட்டாசு வெடித்த காரணத்தால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அது பற்றிய வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. மேலும் தேர்தல் பற்றிய முக்கிய ஆவணங்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறை சிறப்பு அதிகாரி ஒருவர் இந்த அலுவலகத்தை நியமித்து வருகிறார்.
தற்போது இங்கு தீ விபத்து நடந்துள்ளதால் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்ததா? அல்லது யாரேனும் விபத்தை ஏற்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் பல எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.