போனி கபூர் படப்பிடிப்பில் தீ விபத்து - ஒருவர் பலி

மும்பையில் ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-31 11:54 GMT

மும்பையில் ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


 



பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது ஹிந்தியில் ரன்பீர் கபூர், ஷரத்தா கபூர் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் படத்தில் போனி கபூர் ஒரு நடிகராகவும் அறிமுகம் ஆகிறார்.




 

இந்தப் படம் மும்பை அந்தேரி பகுதியில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ரிகர்சல் நடைபெற்று வந்தது அப்போது. அங்கு பொருத்தப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதால் நேற்று மாலை 4 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது இதனால் படக்குழுவிற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் ஒருவர் இறந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Similar News