ஜிவி பிரகாஷின் 'வணக்கம்டா மாப்ள' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஜிவி பிரகாஷின் 'வணக்கம்டா மாப்ள' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!;

Update: 2021-02-22 18:39 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஆகவும்  வளர்ந்துவரும் நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். அந்த வகையில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம்டா மாப்ள என்ற படத்தில் நடித்து வந்தார்.சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


 

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் நடிகை அம்ரிதா ஐயர் மற்றும் டேனியல் உள்ள போஸ்டரும் ஜிவி பிரகாஷ் மற்றும் டேனியல் போப் ஆகிய இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் பர்ஸ்ட்லுக் போஸ்டராக வெளிவந்துள்ளது.

சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகும்  இப்படத்திற்கு சித்தார்த் ரங்கநாதன் ஒளிப்பதிவில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News