மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்..!
மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்..!;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது உடல் எடையை குறைத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் படம் மாநாடு.பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது.
இந்நிலையில் திடீரென ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். தற்போது புதுச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 24 ஆம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 10 மணி அளவில் படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.இதை பார்த்து சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மாநாடு படத்தின் போஸ்டரில் கோவில் படத்தில் நம் கண் முன் வந்த சிம்புவை போன்று வந்துள்ளார். முழுக்க அரசியலைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் டீசர் வெளியீடு, ட்ரைலர் படத்தின் ரிலீஸ் தேதி என இன்னும் சில நாட்களில் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.