கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு?
கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு?;
நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று சூட்டிங் முடிவடைந்த நிலையில் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்துள்ளன.இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
விவேக்-மெர்வின் இசையில் அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா பாடிய இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். மேலும் 'சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு' என்று தொடங்கும் இந்த பாடல் ஆட்டம் போடும் வகையில் உள்ளது என்பதும் சற்று முன் வெளியான இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது கார்த்திக் ரசிகர்களின் ஆல் வைரலாகி வருகிறது.