ஆர்யா - பா.ரஞ்சித் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு.!

ஆர்யா - பா.ரஞ்சித் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு.!

Update: 2020-12-02 17:15 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை குறித்த கதை கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்த்ன் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது."சார்பட்டா" என்று வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக்கில் ஆர்யா, அசல் குத்து சண்டை வீர்ராகவே மாறியுள்ளார்.

வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஆர்யாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தை அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து பா.ரஞ்சித் இயக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  குறிப்பிடப்பட்டுள்ளவை:இங்க வாய்ப்பு என்றதும் நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா’ என்று பதிவு செய்துள்ளார்.

ஆர்யா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், காளி வெங்கட், சஞ்சனா நடராஜன், முத்துகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். முரளி ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும்  கமெண்ட்களையும் வாழ்த்துக்களையும்  பதிவிட்டு வருகின்றனர்.

Similar News