மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படம் - உலகநாயகனின் மெகா பிளான்

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Update: 2022-06-29 11:01 GMT

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.




 

தற்போது விக்ரம் திரைப்படம் 400 கோடி அளவிற்கு வசூலை குவித்துள்ளது, இந்நிலையில் நிறைய படங்கள் நிலுவையில் இருப்பதால் எந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.




 

ஏற்கனவே நிலுவையில் இருக்கும் படங்களில் இப்பொழுது கவனம் செலுத்துவதை விட மேலும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் கவனம் செலுத்த கமல் முயற்சித்து வருகிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் போலவே இரண்டு, மூன்று கதாநாயகர்களை வைத்து உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News