வரலட்சுமி பெயரில் நடந்த மோசடி : ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்.!

வரலட்சுமி பெயரில் நடந்த மோசடி : ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்.!;

Update: 2020-12-03 17:44 GMT

தமிழ் சினிமாவில் 80,90களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். அவரின் மகளான வரலட்சுமி ஒரு முக்கியமான வேண்டுகோளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார்.

இவர் 'போடா போடி' என்ற படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறுவது: நேற்று இரவு முதல் எனது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் அக்கவுன்டுகளை ஹேக் செய்துள்ளார்கள். இதற்காக நான் சம்பந்தப்பட்ட குழுவுடன் பேசி கொண்டிருக்கிறேன்.

அதை மீட்க சில நாட்கள் ஆகலாம் என தெரிகிறது.என்னை பின் தொடர்பவர்கள் அடுத்த சில நாட்களுக்கு எனது அக்கவுன்ட்டில் இருந்து வரும் மெசேஜ்கள் குறித்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்த பிரச்சனை சரி ஆன பிறகு, நான் அதை முறையாக அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினான வரலட்சுமியின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையடுத்து எவ்வாறு நடந்தது என்று சம்மந்தப்பட்ட துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Similar News