வி.ஜே.சித்ரா கடைசியாக நடித்த திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்!
வி.ஜே.சித்ரா கடைசியாக நடித்த திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்!;
சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத் திரை உலகை மட்டுமின்றி பெரிய திரையையும் அதிர்ச்சி அடைய செய்தது. சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 'கால்ஸ்'.பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது.எனவே கால்ஸ் படத்தின் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி ஆன இன்று இப்படம் வெளியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதாலும் பெண்கள் இந்த படத்தை பார்க்க ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் உள்ள திரை அரங்குகளில் இந்த படத்தை காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இச்செய்தி தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.