மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு! திரைபிரபலங்கள் அஞ்சலி!
மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு! திரைபிரபலங்கள் அஞ்சலி!;
மூத்த பழம்பெரும் மலையாள திரைப்பட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98) காலமானார். அவருக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மலையாளப் படங்களில் தாத்தா வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இதன் பின்னர் தமிழில் கமல் நடிப்பில் வெளியான ‘பம்மல் கே சம்பந்தம் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இதன் பின்னர் கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் என வந்ததை தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் வீட்டில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிர் பிரிந்துள்ளது. உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கேரளா திரைத்துறை மட்டுமின்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதே போன்று கமல்ஹாசனும் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறும் என நம்பூதிரியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.