கடவுள் ஆசியுடன் ரஜினி விரைவில் குணமடைவார்.. பிரபல நடிகர் அறிக்கை.!
கடவுள் ஆசியுடன் ரஜினி விரைவில் குணமடைவார்.. பிரபல நடிகர் அறிக்கை.!;
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றி வந்த டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்று ரிப்போர்ட் வந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பற்றி எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்தத்தால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியம் படைத்தவர், அது மட்டுமின்றி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார். அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.