ரசிகர்கள் வரவேற்ப்பில் 'காட்பாதர்' டீசர் - சல்மானுடன் மாஸாக தோன்றும் சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக 'காட்பாதர்' டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 03:15 GMT

சிரஞ்சீவியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக 'காட்பாதர்' டீசர் வெளியிடப்பட்டுள்ளது.




 

மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்து நூறு கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றி பெற்ற படம் 'லூசிபர்', இதனை தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இயக்குனர் மோகன்ராஜ் 'காட்பாதர்' என்ற பெயரில் மறுபதிப்பு செய்து வந்தார்.




 

இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடித்த அந்த கதாபாத்திரத்தை சல்மான்கான் நடித்துள்ளார். இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News