சூர்யாவின் படத்தில் இணையும் பிரபல நடிகரின் பேரன்.!

சூர்யாவின் படத்தில் இணையும் பிரபல நடிகரின் பேரன்.!

Update: 2020-12-14 17:54 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளின் வாரிசுகள் நடிக்க வருவது புதிதல்ல அந்தவகையில் திலகம் சிவாஜி கணேசன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாரிசுகள் வரை திரையுலகில் அறிமுகமாகி தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.தற்போது ஒரு பிரபல நடிகரின் பேரன் சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார். 


 

மேலும் விஜயகுமாரின் மகனான அருண் விஜய். தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றவர்.

தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தனது மகன் அர்னவ் விஜய் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் அவரது மகன் அர்னவ்விஜய் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா உலகிற்கு வரும் அருண் விஜய்யின் மகனையும் திரையுலகம் வாழ்த்தி வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த படம் பற்றிய முழுமையான தகவல்கள் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

Similar News