கின்னஸ் சாதனைக்காக ஒரே ஒருவர் நடித்துள்ள படம்

கின்னஸ் சாதனைக்காக ஒரே ஒருவர் மட்டுமே நடித்து கமர்சியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர்.

Update: 2023-09-02 09:30 GMT

இயக்குனரும் நடிகருமான ஜி.சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டண்ணு வெயிட்டுடா' இந்த படம் குறித்த ஜி.சிவா கூறும் போது ஒரே ஒரு நடிகர் மட்டும் நடிச்ச படங்கள் ஏற்கனவே நிறைய வந்துள்ளன. ஆனால் முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பி இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்.


கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி நிறைவு செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. ஒரே நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க அதிரடி சண்டை காட்சிகளையும் படத்தில் வைத்து இருக்கிறேன். இந்த படம் தமிழ் சினிமாவில் புது முயற்சி. படதத்தை கின்னஸ் சாதனைக்கு அனுப்பி விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் கேட்ட தகவல்களையும் காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம் என்றார். ஒளிப்பதிவு ஓகி ரெட்டி சிவகுமார், அருண் சுசில், இசை மணி சேகரன் செல்வா , தயாரிப்பு: பாலா, ஞானசுந்தரம்.


SOURCE :DAILY THANTHI

Similar News