தனுஷ் நடிக்கும் "D43" மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடிக்கும் "D43" மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

Update: 2021-01-08 16:25 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகர் தனுஷ்.இவர்கள் இருவரும் ஏற்கனவே மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் ஒரு பாலிவுட் படம் ஆகியவற்றில் நடித்து முடித்துள்ளார் இந்த 3 படங்களும் அடுத்தடுத்து இவ்வருடம் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 தனுஷின் அடுத்த படமான "D43" படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் D43 படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தனுஷின் D43 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாகவும் இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் ஓப்பனிங் பாடலின் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும், பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை தனுஷ் பாடி உள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் மாஸ் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடல் ஸ்டைலிஷ் மாஸ் டிராக் ஆக உருவாகி உள்ளது என்றும் இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.

 

Similar News