அவர் தான் என்னுடைய பெஸ்ட்.. நயன்தாரா.!
அவர் தான் என்னுடைய பெஸ்ட்.. நயன்தாரா.!;
தமிழ் திரையுலகில் மிகவும் சிறப்பான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக இவரது வளர்ச்சி உச்சத்திற்கு சென்றுள்ளது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டும் தான் தற்போதைக்கு சொல்ல முடியும்.
நடிகர்களுக்கு இணையாக தன்னை போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் பிடிக்காமல் தனது மார்க்கெட்டை தக்க வைத்து வருகின்றார்.
இவர் தமிழ் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.
இந்நிலையில், நயன்தாரா ஒரு பேட்டியில் தன்னுடைய திரை பயணத்தின் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நீங்கள் நடித்ததிலே உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல், நான் எத்தனை பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அஜித் சார் தான் என்னுடைய ஃபேவரைட் என கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் ரசிகர்களும் நயன்தாராவை உச்சத்தில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.