மாநிலத்திற்கு இனிமேல் இவர்தான்.. நடிகர் சோனு சூட்டை கவுரவித்த தேர்தல் ஆணையம்.!
மாநிலத்திற்கு இனிமேல் இவர்தான்.. நடிகர் சோனு சூட்டை கவுரவித்த தேர்தல் ஆணையம்.!;
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கின்போது ஏழை மக்களுக்கு அதிகளவில் உதவி செய்தார். அதாவது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியபோது பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
அது போன்றவர்களுக்கு உணவு, மற்றும் போக்குவரத்திற்கு பேருந்துகளை தயார் செய்து கொடுத்தார். இவர் மூலம் பல ஆயிரம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் சிக்கிய கல்லூரி மாணவர்களை தனது சொந்த முயற்சியில் விமானம் மூலம் அழைத்து வந்தார்.
இதனால் இந்தியாவின் ரியல் ஹீரோவாக மக்களிடம் அடையாளம் காணப்பட்டார். பல நடிகர்கள் இருக்கும் போது இவர் ஓடி ஓடி மக்களுக்காக உழைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் சிக்கியவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பியும், புலம் பெயர்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தும் மனித நேயத்துடன் நடந்து கொண்டதால் சோனுவுக்கு பஞ்சாப் மாநிலம் இந்த கவுரவத்தை வழங்கியுள்ளது. திரையில் வில்லனாக வரும் சோனு சூட் தற்போது ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.